முன்கூட்டிய வரி செலுத்தியதில் மும்பை நிறுவனங்கள் முதலிடம்முன்கூட்டிய வரி செலுத்தியதில் மும்பை நிறுவனங்கள் முதலிடம் ... திருப்பதியில் காசாகும் கேசம்... மின்னணு ஏலத்தில் ரூ.133கோடி வருவாய் திருப்பதியில் காசாகும் கேசம்... மின்னணு ஏலத்தில் ரூ.133கோடி வருவாய் ...
உணவுப் பொருள் பணவீக்கம் 1.81 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2011
01:57

புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், டிச., 10ம் தேதியுடன் நிறை வடைந்த வாரத்தில், 1.81 சதவீதமாக குறைந்தது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 4.35 சதவீதமாக அதிகரித்திருந்தது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு, பிப்., 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், உணவுப் பொருள் பணவீக்கம், 2.26 சதவீதமாக குறைந்திருந்தது. அதற்கு பிறகு, தற்போதுதான் இந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 2010ம் ஆண்டின் இதே வாரத்தில், உணவுப் பொருள் பணவீக்கம், 13.22 சதவீதம் என்றளவில் மிகவும் உயர்ந்திருந்தது.
கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், வெங்காயம் விலை, 49.38 சதவீதம் குறைந்துள்ளது. இது தவிர, உருளைக் கிழங்கு (34.39 சதவீதம்), கோதுமை (4.21 சதவீதம்)ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது. ஒட்டுமொத்த காய்கறிகள் விலை, 26.37 சதவீதம் குறைந்து காணப்பட்டது.அதேசமயம்,ஆண்டு கணக்கின் அடிப்படையில், பெரும்பாலான உணவு பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக,பருப்பு வகைகளின் விலை, 14.22 சதவீதம் அதிகரித்துள்ளது. பால்(11.19சதவீதம்) முட்டை, இறைச்சி, மீன் (9.25 சதவீதம்) ஆகியவற்றின் விலை யும் உயர்ந்திருந்தது.
இது தவிர, பழங்கள் விலை,8.89 சதவீதமும், உணவு தானியங்கள் விலை,1.68 சத வீதமும் உயர்ந்திருந்தது.டிச.,10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்,முக்கிய பொருட்களுக்கான பணவீக்கம், 3.78 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது,இதற்கு முந்தைய வாரத்தில், 5.48 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.மொத்த விலைக் குறி யீட்டு எண் கணக்கிடுவதில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு,20 சதவீதம் என்றளவில் உள்ளது.
எரிபொருள் பணவீக்கம், எவ்வித மாற்றமும் இன்றி, 15.24 சதவீதம் என்றளவிலேயே இருந்தது. நடப்பு 2011ம் ஆண்டின் பல வாரங்களில், நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், இரட்டை இலக்கத்திலேயே இருந்தது.
இருப்பினும், நாட்டின் பல மாநிலங்களில், வேளாண் சாகுபடி சிறப்பாக இருந்ததை அடுத்து தானிய உற்பத்தி உயர்ந்துள்ளது. இதனால், உணவுப் பொருள் பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக குளிர்காலத்தில்விளை பொருள்களின், விலை குறைவாகவே இருக்கும்.நாட்டின் உணவுப் பொருள் பண வீக்கம் குறைந்துள்ளதையடுத்து, பொதுப் பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)