பதிவு செய்த நாள்
24 டிச2011
02:32

பழநி:முல்லைப் பெரியாறு பிரச்னையால், பழநி நெய்க்காரபட்டி வெல்லச் சந்தையில், 10 ஆயிரம் மூட்டைகள் தேங்கியுள்ளன. இங்கு ஐந்து வெல்லச் சந்தைகள் உள்ளன. புதன், சனிக்கிழமைகளில், சுற்று வட்டார உற்பத்தியாளர்கள், ஏல முறையில் விற்பனை செய்வர். பெருமளவு வெல்லத்தை, கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்வர். தமிழகத்தின் பிற மாவட்ட வியாபாரிகளும் கணிசமான அளவில் கொள்முதல் செய்வர்.
நவம்பர் முதல் ஏப்ரல் வரை, விற்பனை மந்தமாக இருக்கும். சபரிமலை "சீசன்' காரணமாக, கேரள வியாபாரிகள் இங்கு வருவர். அரவணை பிரசாத தயாரிப்பிற்கு, வெல்லம் கொள்முதல் செய்வர். தமிழக வியாபாரிகள், கரூர் மாவட்டம் பெரிக்கல் பாளையம் சந்தைகளுக்கு செல்வர். இந்நிலையில், தற்@பாது, முல்லைப் பெரியாறு பிரச்னையால், இச்சந்தைகளுக்கு வரும் கேரள வியாபாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
இதுகுறித்து வெல்லம் உற்பத்தியாளர் முருகன் கூறுகையில், "இரண்டு வாரங்களாக, (30 கிலோ) சிப்பங்களுக்கு தலா 150 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் லாபம் இல்லை. நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால், 10 ஆயிரம் மூட்டைகள் தேங்கியுள்ளன. மேலும் பிரச்னை நீடித்தால் வெல்லம் இளகி, வீணாகும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|