பதிவு செய்த நாள்
27 டிச2011
16:30

காரைக்குடி: காரைக்குடி மானகிரி பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையினை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திறந்து வைத்தார். இதனை அடுத்து மேலும் புதிதாக 200 கிளைகளை திறக்கப்பட உள்ளதாக அப்பல்லோ நிர்வாகி பிரித்தா ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் , நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் 200 மருத்துவமனை கிளைகள் திறக்க திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில், 10 மருத்துவமனை கிளைகளின் பணிகள் நடந்து கொண்டுள்ளது. 7 மருத்துவமனை கிளைகளின் பணிகள் முடிவடைந்து திறக்கப்படும் நிலையில் உள்ளன. நோயாளிகளின் வசதிக்காக 110 படுக்கை வசதிகளை கொண்ட பல்துறை மருத்துவமனைகள் இயக்கப்படும் என்றார். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பி.சி.ரெட்டி கூறுகையில், கிராம மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள 46 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் குறைந்தது 100 கி.மீ ., பயணம் செய்து மருத்துவம் பார்க்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு நோயாளிகளின் குறை தீர்க்க இருதய சிகிச்சை, எழும்பு மருத்துவப்பிரிவு, அவசர சிகிச்சை, உடனடி அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகளை கொண்ட 21 சிறப்பு மருத்துமனைகள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|