பதிவு செய்த நாள்
28 டிச2011
01:50
சேலம்:சேலம் புளி மண்டிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதை அடுத்து, புளி வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளது.தமிழகத்தில் பொதுவாக ஜனவரி மாதம் முதல் வாரத்தில் துவங்கும் புளி சீசன், ஜூன் மாதம் வரை இருக்கும். இந்த காலங்களில் புளியின் விலையில் சரிவு ஏற்படுவது வழக்கம். இவ்வாண்டு, புளி அதிகளவில் விளையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.
சேலம், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் புளி மண்டிகளுக்கு, மகாராஷ்டிரா, பீகார், சத்திஸ்கர், ஒடிசா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புளிகளை, வியாபாரிகளே மொத்தமாக கொள்முதல் செய்து, மண்டிகளிலேயே தேக்கி வைத்துள்ளனர்.கர்நாடக மாநிலம் தும்கூரை அடுத்து, சேலம் மண்டிகளில் இருந்து தான், அதிகளவில் புளி, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், ஏற்காடு, கல்ராயன் மலைப்பகுதி, தர்மபுரி மாவட்டம் அரூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புளி அதிகம் விளைகிறது. இங்குள்ள வியாபாரிகளிடம் இருந்து அதிகளவில் புளியை வாங்கிய சேலம் வியாபாரிகள், அவற்றை கிடங்குகளில் இருப்பு வைத்தனர்.இதன் காரண மாக, சென்ற ஆண்டு அக்டோபரில், 45 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ புளி, நடப்பாண்டு ஜனவரி யில், 100 ரூபாயை தொட்டது. கடந்த வாரம் தும்கூர் புளி, 160 ரூபாய்க்கும், நாட்டுப்புளி, 110 ரூபாய் என்ற அளவுக்கும் உயர்ந்தது.
இதையடுத்து, புளியை பதுக்கி விற்போர் மீது தமிழக அர” நடவடிக்கை எடுத்தது. உணவு கடத்தல், பதுக்கல் பிரிவு அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், உணவு கடத்தல் பிரிவு போலீசார், சேலம் செவ்வாய்ப்பேட்டை புளி மண்டிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அதிகளவில் கணக்கில் காட்டப்படாத புளி இருப்பு வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததோடு, இருப்பு வைத்துக் கொள்ளும் புளியின் அளவையும் குறைத்தனர்.
இதையடுத்து, மார்க்கெட்டுக்கு, அதிகளவில் புளி விற்பனைக்கு வரத் துவங்கியதால், புளியின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 160ரூபாய்க்கு விற்ற தும்கூர் புளி தற்போது 110 ரூபாய்க்கு கிடைக்கிறது. நாட்டுப்புளி விலை, 110 ரூபாயில் இருந்து, 90 ரூபாயாக குறைந்துள்ளது. புளி சீசன் இன்னும், 20 நாளில் துவங்க உள்ளதால், விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விலைவாசி நிலவரம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|