பதிவு செய்த நாள்
28 டிச2011
01:52

மும்பை:மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகளில், சேமிப்பு கணக்கிற்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள குறைந்தபட்ச வட்டிக்கான உச்ச வரம்பை, ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இதனால், இவ்வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக வட்டி கிடைக்கும்.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகள், 1 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்கிற்கு, அதில் எந்த அளவிற்கு தொகை இருந்தாலும், ஒரே சீரான வட்டி வழங்க வேண்டும். 1 லட்சரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு,வங்கிகள் விருப்பமான வட்டியை வழங்கலாம். எனி னும், இந்த வட்டி விகிதமும், டெபாசிட் தாரர்களிடையே பாரபட்சமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவால், மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகள், அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில், கூடுதல் வட்டி வழங்கும் என்று தெரிகிறது. இது, இத்துறையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத் துவதோடு, முதலீட்டாளர் களுக்கும் கூடுதல் வருவாயை வழங்கும்.ரிசர்வ் வங்கி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கான குறைந்தபட்ச வட்டியை, 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியது.
மேலும்,1 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்கிற்கு ஒரே சீரான வட்டியும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு விருப்பமான வட்டியை நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.இதையடுத்து,யெஸ் பேங்க், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 6 சதவீதமாக உயர்த்தி, தற்போது,7 சதவீதமாக அதிகரித்துள்ளது.கோட்டக் மகிந்திரா வங்கி, சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும் சில வங்கிகளும் வரும் ஆண்டு தொடக்கத்தில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|