பதிவு செய்த நாள்
28 டிச2011
01:54

புதுடில்லி:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாயன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒரு சில ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் விடுமுறை காரணமாக வர்த்தகம் நடைபெற வில்லை. இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளில், நேற்று வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. எனினும், பிற்பகலில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.
நாட்டின் பங்குச் சந்தையில், நேற்று நடைபெற்ற வியாபாரத்தில், மின்சாரம், மோட்டார் வாகனம், எண்ணெய், பொறியியல், வங்கி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து, உருக்கு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 96.80 புள்ளிகள் சரிவடைந்து, 15,873.95 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16, 049.12 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,799.63 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவ னங் களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 28.50 புள்ளிகள் குறைந்து, 4,750.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த் தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,800.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,723.65புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|