பதிவு செய்த நாள்
28 டிச2011
10:38

கம்பம்;ஒரே நாளில் ஒரு லட்சம் கிலோ ஏலக்காயை, வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு கொள்முதல் செய்தனர். இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் ஏலத்தோட்டங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை. இங்கு பறிக்கப்படும் ஏலக்காய், இங்குள்ள ஸ்பைசஸ் வாரியத்தின் ஆக்ஷன் ஹாலில் வைத்து விற்பனை செய்யப்படும். வாரத்தின் ஏழு நாட்களும், ஒவ்வொரு ஆக்ஷன் கம்பெனியும், ஆக்ஷனை நடத்தும்.
முல்லைப் பெரியாறு அணை போராட்டம் துவங்கிய, டிச., 5 முதல், நேற்று முன்தினம் வரை ஏலக்காய் ஆக்ஷன் நிறுத்தப்பட்டது. இதனால் 15 லட்சம் கிலோ ஏலக்காய் வரை தேங்கியது.நேற்று காலை கம்பமெட்டு, புத்தடியில் உள்ள ஸ்பைசஸ் வாரியத்தின் ஆக்ஷன் ஹாலில், ஏலம் நடத்தினர். நேற்று ஒரு லட்சத்து 3 ஆயிரம் கிலோ ஏலக்காய் பதிவாகியிருந்தது. போடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான ஏல வியாபாரிகள், இந்த ஆக்ஷனில் கலந்து கொண்டு ஏலக்காய் கொள்முதல் செய்தனர். சராசரியாக கிலோவிற்கு ரூ.516 கிடைத்தது. ஆக்ஷனுக்கு வந்திருந்த வியாபாரிகளை, கேரள மாநிலத்தை சேர்ந்த ஏல ஆக்ஷன் கம்பெனி நிர்வாகிகள் வரவேற்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|