பதிவு செய்த நாள்
30 டிச2011
00:43

சென்னை:விளையாட்டு சார்ந்த மென்பொருள் துறையில், சென்னை நகரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்னை, தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கிய நகரமாக திகழ்கிறது. இங்கு ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுகின்றன. மருத்துவம், நிதித் துறைகளில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைப் பிரிவுகளிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.
உலகம் முழுவதும், அண்ட்ராய்டு இயக்கத் தொகுப்பிலான மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவ்வகை மொபைல்போன்களில், விளையாட்டு சார்ந்த மென்பொருள்களை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் சென்னை நகரம் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.இந்திய மென்பொருள் தொழில் பூங்கா (எஸ்.டி.பி.ஐ.,) அமைப்பின் கீழ், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1,766 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. சென்ற 2010-11ம் நிதியாண்டில், தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி, 42 ஆயிரத்து 211 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2009-10ல், 36 ஆயிரத்து 765 கோடி ரூபாயாக இருந்தது. சென்னை, கோவை போலவே, சேலம், திருச்சி ஆகிய நகரங்களும், தகவல் தொழில்நுட்பத் துறையில் விரைவான வளர்ச்சியை கண்டு வருகின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|