தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:-பிசினஸ் ... ... தங்கத்தை விட வைர நகைகளுக்கு மவுசு கூடுகிறது தங்கத்தை விட வைர நகைகளுக்கு மவுசு கூடுகிறது ...
உணவுப் பொருள் பணவீக்கம் 0.42 சதவீதமாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2011
00:44

புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், டிசம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 0.42 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய வாரத்தில், 1.41 சதவீதமாக இருந்தது. கணக்கீடு செய்வதற்கு எடுத்து கொள்ளப்பட்ட வாரத்தில், வெங்காயம் விலை, 59.04 சதவீதம் குறைந்திருந்தது. மேலும், உருளை கிழங்கு (33.76 சதவீதம்), கோதுமை (3.20 சதவீதம்), காய்கறிகள் (36.02 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது.
அதேசமயம் ஆண்டு கணக்கின் அடிப்படையில், பெரும்பாலான உணவு பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. பருப்பு வகைகள் விலை, 14.07 சதவீதம் அதிகரித்திருந்தது. பால் (11.30 சதவீதம்), முட்டை, இறைச்சி மற்றும் மீன் (11.56 சதவீதம்), பழங்கள் (8.46 சதவீதம்), தானியங்கள் (2.15 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருந்தது.மொத்த விலைக் குறியீட்டு எண் கணக்கிடுவதில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இது, டிசம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 2.70 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில், 3.78 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.உணவு சாரா பிரிவில், நூலிழை, எண்ணெய் வித்துக்களின் விலை, 0.28 சதவீதம் குறைந்துள்ளது. இது, முந்தைய வாரத்தில், 1.37 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. இதே வாரங்களில்,எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம்,15.24 சதவீதத்தில் இருந்து 14.37 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)