பதிவு செய்த நாள்
30 டிச2011
11:56

கம்பம் : குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க, தமிழகம் முழுவதும் 60 நகராட்சிகளை, நகராட்சிகளின் இயக்குனரகம் தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும், நமது தேவைக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு, பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் தயாரிக்க, மரபுசாரா எரிசக்தி துறை மூலம் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்றாக, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென, தமிழகம் முழுவதும் 60 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியும் ஒன்றாகும். தினந்தோறும் சேகரமாகும் குப்பையில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அது மின் தயாரிப்பிற்கு உதவுமா என்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. கம்பம் நகராட்சியில் குப்பை பரிசோதனைக்கென, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன், மின்சாரம் தயாரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|