ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்ததுஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது ... நிலையான வளர்ச்சியில் உலக தொழில் துறை நிலையான வளர்ச்சியில் உலக தொழில் துறை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அனைத்து டூ வீலர்களுக்கும் ஒரே எஞ்சினை உருவாக்கி டிவிஎஸ் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2011
14:33

ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட எந்தவொரு டூ வீலர்களிலும் பொருத்தும் வகையிலான ஒரே இஞ்சினை டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. அந்த நிறுவன இஞ்சினியர்களின் 7 ஆண்டுகால முயற்சியில் இந்த புதிய இஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய இஞ்சின் சாதாரண இஞ்சின்களை விட 20 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் புதிய தொழில்நுட்ப உருவாக்க பிரிவு தலைவர் ஹார்னி வினய் சந்திரகாந்த் கூறியதாவது: 'ஸ்கூட்டர் அல்லது பைக்குகளில் பொருத்துவதற்கு ஏதுவாக ஒரே இஞ்சினை உருவாக்கியுள்ளோம். இந்த இஞ்சின் உற்பத்தி நிலையை எட்டவுள்ளது. தற்போது 110 சிசி திறன் கொண்ட இஞ்சினை உருவாக்கியுள்ளோம். 250 சிசி வரை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இஞ்சின்களை இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்க முடியும். பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் எங்களது வடிவமைப்பு பிரிவு இஞ்சினியர்களின் 7 ஆண்டுகால முயற்சியில் புதிய இஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு புதிய இஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என்பதோடு, குறைந்த கார்பன் புகையை வெளியிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்த இஞ்சினாக இருக்கும். தவிர, இந்த புதிய இஞ்சின் மூலம் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு தனித்தனியாக உற்பத்திப் பிரிவு தேவைப்படாது என்பதால் உற்பத்தி செலவு வெகுவாக குறையும்.வரும் 2013ம் ஆண்டில் புதிய இஞ்சினுடன் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். முதலில் ஸ்கூட்டரில் இந்த புதிய இஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வசதியாக ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்களை விற்பனை செய்வோம்,' என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)