தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... நாட்டின் ஏற்றுமதி ரூ.1.11 லட்சம் கோடியாக வளர்ச்சி நாட்டின் ஏற்றுமதி ரூ.1.11 லட்சம் கோடியாக வளர்ச்சி ...
அன்னிய நேரடி முதலீடு 2,368 கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
00:03

புதுடில்லி: சென்ற 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 2,368 கோடி டாலராக (1 லட்சத்து 18 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 36 சதவீதம் (1,736 கோடி டாலர் - 86 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) அதிகம் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரச, அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், இந்தியாவில் தொழில் துவங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், முதியோர் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காணப்பட்டாலும், நாட்டில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.மொரீஷியஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து அதிகளவில், இந்தியாவில் முதலீடு செய்யப்படுகிறது. கடந்த ஒன்பது மாத காலத்தில், தொலைத் தொடர்பு, குடியிருப்பு மற்றும் ரியல் எஸ்டேட், அடிப்படை கட்டமைப்பு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில், பெருமளவு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 1,942 கோடி டாலராக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் (2009-10), 2,583 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.
இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை 24.97 சதவீதம் வளர்ச்சி கண்டு, 62 ஆயிரத்து 991 லிருந்து, 78 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஸ்கூட்டர்கள் விற்பனையும் 45.20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 77 ஆயிரத்து 728 லிருந்து, 1 லட்சத்து 12 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ
சென்ற 2011ம் ஆண்டு டிசம்பரில், பஜாஜ் ஆட்டோவின் இரு சக்கர வாகன விற்பனை, 8 சதவீதம் (2 லட்சத்து 43 ஆயிரத்து 675 வாகனங்கள்) அதிகரித்து, 2 லட்சத்து 63 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது.ஒட்டு மொத்த வாகன விற்பனை 10.44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து 76 ஆயிரத்து 803 என்ற எண்ணிக்கையிலிருந்து, 3 லட்சத்து 5 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி, 25.50 சதவீதம் அதிகரித்து, 95 ஆயிரத்து 388 லிருந்து, 1 லட்சத்து 19 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 26.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33 ஆயிரத்து 128 லிருந்து, 41 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)