பதிவு செய்த நாள்
03 ஜன2012
10:06

தமிழகத்தில், நடப்பாண்டுக்கான கரும்பு கொள்முதல் விலை இன்னமும் அறிவிக்காததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள் உள்ளனர். நவம்பர் மாதம் துவங்கி, ஆறு மாதங்கள் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. கூட்டுறவு, தனியார் என, 45 சர்க்கரை ஆலைகள் தமிழகத்தில் செயல்படுகின்றன. குறைந்தபட்ச கொள்முதல் விலையை ஆண்டுதோறும் அரசு அறிவிக்கிறது.
கடந்தாண்டு நிலவரப்படி டன்னுக்கு, 1,900 ரூபாய் கொள்முதல் விலையாக உள்ளது; அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வயலில் கரும்பை அறுவடை செய்து, அதற்கு ஏக்கருக்கு, 400 முதல், 700 ரூபாய் வரை வெட்டுக்கூலியாகப் பிடித்துக் கொண்டு தொகையை ஆலைகள் வழங்குகின்றன. வெட்டுக்கூலி பிடிக்காமல் முழு கொள்முதல் விலையை வழங்கும் முறையையும் கொண்டு வர, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான கொள்முதல் விலை இதுவரையிலும் அறிவிக்கப்படாதது, விவசாயிகளை மேலும் வேதனையடைய செய்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: இந்தாண்டு இன்னமும் விலை நிர்ணயிக்கவில்லை. பழைய விலைக்கே கரும்பு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். மேலும், ஆலை வாயில் விலையை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை விரைவில் நிறைவேற்றாத பட்சத்தில், போராட்டத்தில் இறங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|