பதிவு செய்த நாள்
03 ஜன2012
10:09

புத்தாண்டில், கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை, 1,500 ரூபாயை நெருங்கியுள்ளது. மூன்று ஆண்டுகளில் கமர்ஷியல் சிலிண்டர் விலை இரட்டிப்பாகியுள்ளது. ஐ.ஓ.சி., - எச்.பி., - பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்திற்காக, 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர்களையும், வணிக பயன்பாட்டிற்காக, 19.2 கிலோ எடையுள்ள கமர்ஷியல் காஸ் சிலிண்டர்களையும் வினியோகம் செய்கிறது. கமர்ஷியல் சிலிண்டருக்கு அரசு மானியம் வழங்குவதில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து, மாதம் தோறும், கமர்ஷியல் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். 2008 நவம்பர் மாதம், 1,238.85 ரூபாயாக இருந்த கமர்சியல் சிலிண்டர், 2008 டிசம்பரில், 949.95 ரூபாயாகவும், 2009 ஜனவரியில், 758.35 ரூபாயாகவும் வீழ்ச்சியடைந்தது.
ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதன் பின், கமர்ஷியல் சிலிண்டர் விலை உயரத் துவங்கியது. 2009 ஜனவரிக்கு பின் விலை படிப்படியாக அதிகரித்து, 2010 ஜனவரியில், 1,160.10 ரூபாயாகவும், 2011 ஜனவரியில் 1,372.18 ரூபாயாகவும் உயர்ந்தது. கடந்த மாதம், 1,391 ரூபாயாக இருந்த கமர்ஷியல் சிலிண்டர் விலை, 2012 ஜனவரி 1ம் தேதி முதல், 1,457.50 ரூபாயாக உயர்ந்தது. ஒரு மாதத்தில் சிலிண்டர் விலை, 66 ரூபாய், 50 காசு அதிகரித்துள்ளது. 2009 ஜனவரியில், 758 ரூபாயாக இருந்த கமர்ஷியல் சிலிண்டர் விலை, 2012 ஜனவரியில், 1,457.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் கமர்ஷியல் சிலிண்டர் விலை இரட்டிப்பாகியுள்ளது. நடப்பாண்டு முதல் மாதத்திலேயே கமர்ஷியல் சிலிண்டர் விலை, 1,500 ரூபாயை நெருங்கியுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|