பதிவு செய்த நாள்
05 ஜன2012
01:38

புதுடில்லி:வாடிக்கையாளர்கள் தரம் குறைந்த தங்க நகைகளை வாங்கி பாதிப்புக்குள்ளாவதை தடுக்கும் வகையில், இனி,"ஹால்மார்க்' முத்திரை கொண்ட தங்க ஆபரணங்களை மட்டுமே விற்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில், சில தங்க ஆபரண விற்பனை மையங்கள், தரம் குறைந்த நகைகளை விற்பனை செய்து வருகின்றன. எனினும், பல நிறுவனங்கள் தங்கத்தின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்,"ஹால்மார்க்' முத்திரை கொண்ட, நகைகளை விற்பனை செய்கின்றன.
இந்நிலையில், தரம் குறைந்த ஆபரணங்களால், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அனைத்து தங்க விற்பனை நிலையங்களும், "ஹால்மார்க்' முத்திரை கொண்ட நகைகளையே விற்க வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழு, இத்திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய தர நிர்ணய சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
நுகர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் என்ற அமைப்பு (பீ.ஐ.எஸ்), விலை உயர்ந்த உலோகங்களுக்கு ஹால் மார்க் தரக்குறியீட்டினை வழங்கி வருகிறது. சிமென்ட், மினரல் வாட்டர் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட 77 வகையான பொருட்களுக்கு, இந்த அமைப்பு தரக்குறியீட்டை வழங்கியுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|