வருமான வரி பிடித்தம் தமிழகம் 4வது இடம்வருமான வரி பிடித்தம் தமிழகம் 4வது இடம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
டாஸ்மாக் விற்பனை 13 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2012
10:30

"டாஸ்மாக்' மதுபான விற்பனை, 2010ம் ஆண்டை விட, 2011ல், 13 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை முதல் விலை உயர்த்தப்பட்டதால், மாதம், 300 கோடி ரூபாய் அளவுக்கு, வருவாயும் உயர்ந்துள்ளது. "டாஸ்மாக்' மதுபான சில்லரை விற்பனை, ஆண்டுதோறும், 12 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வந்துள்ளது. கடந்த 2010ல், மாதம், 38 லட்சம் பெட்டிகளாக இருந்த விற்பனை, 2011ல், 44 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளன. இதனால் மாதம், 1,500 கோடி ரூபாய் அளவிலிருந்த விற்பனை, 2011ல் மாதம், 1,800 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பண்டிகை காலம் : கடந்த ஜூலையில் குவார்ட்டருக்கு, ஐந்து ரூபாய் வீதம் விலை உயர்த்தப்பட்டது தான், வருவாய் அதிகரிப்புக்குக் காரணம். 2010ல் நவம்பர் மாதம், தீபாவளி வந்ததால், 40.6 லட்சம் பெட்டிகள் விற்பனையாகின. 2011 நவம்பரில், 41 லட்சம் பெட்டிகளே விற்றுள்ளன. ஆனால், தீபாவளி அக்டோபரில் வந்துவிட்டதால், அந்த மாதத்தில், உள்ளாட்சி தேர்தலுக்காக கடைகள் அடைக்கப்பட்டிருந்தும், 47.6 லட்சம் பெட்டிகள் விற்பனையாகின. தீபாவளி தினத்தை ஒட்டி மட்டும், ஏழு லட்சம் பெட்டிகள் விற்பனையாகி உள்ளன. இவ்வாறு, பண்டிகை கால விற்பனையும் அதிகரித்து வருகிறது.
மந்த நிலை : இதேபோல, ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், டிசம்பரில் அய்யப்பன் கோவிலுக்கு பலரும் மாலை போட்டு விரதம் இருப்பதால், சரக்கு விற்பனை வழக்கத்தை விட குறையும். 2010 நவம்பரில், 40.6 லட்சம் பெட்டிகளும், டிசம்பரில், 36.4 லட்சம் பெட்டிகளும் விற்பனையாகின. 2011 நவம்பரில், 41 லட்சம் பெட்டிகளும், டிசம்பரில், 39.9 லட்சம் பெட்டிகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
அதிக விற்பனை : கடந்த 2010 - 11 நிதியாண்டில், 14 ஆயிரத்து, 965 கோடி ரூபாயாக விற்பனை இருந்தது. இந்த நிதியாண்டில், இன்னும் மூன்று மாதங்கள் மீதமுள்ள நிலையில், டிசம்பர் வரையிலேயே, 15 ஆயிரத்து, 577 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. அதேபோல, 2010 - 11ல், மொத்தம், 480.48 லட்சம் பெட்டிகள் விற்பனையாகின. இந்த நிதியாண்டில், டிசம்பர் வரை, 396.84 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி உள்ளன.
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான விற்பனை விவரம்: மாதம் 2010ம் ஆண்டு விற்பனை (லட்சம் பெட்டிகளில்) வருவாய் (ரூ.கோடியில்) 2011ம் ஆண்டு விற்பனை (லட்சம் பெட்டிகளில்) வருவாய் (ரூ.கோடியில்)
ஏப்ரல் 36.5 1428 42.55 1555
மே 39.9 1525 46.26 1736
ஜூன் 38.9 1474 45.03 1732
ஜூலை 39.4 1480 45 1796
ஆகஸ்ட் 40.7 1500 44.7 1800
செப்டம்பர் 39.5 1460 44.7 1824
அக்டோபர் 40.7 1508 47.6 1924
நவம்பர் 40.6 1480 41 1622
டிசம்பர் 36.4 1314 40 1588
2011ம் ஆண்டு நடந்த பீர் விற்பனை
மாதம் விற்பனை அளவு (லட்சம் பெட்டிகளில்)
ஏப்ரல் 17.97
மே 25.2
ஜூன் 27.69
ஜூலை 27.3
ஆகஸ்ட் 25.31
செப்டம்பர் 26.87
அக்டோபர் 25.15
நவம்பர் 18.92

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)