வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்புவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு ... தங்கம் விலை சற்று குறைந்தது தங்கம் விலை சற்று குறைந்தது ...
நடப்பு 2011-12ம் நிதியாண்டில்நாட்டின் ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:10

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
நடப்பு 2011-12ம் முழு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.நம் நாட்டிலிருந்து அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால், ஏற்றுமதி குறைந்து போயுள்ளது என, இந்திய வெளிநாட்டு வர்த்தக பயிலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, நடப்பு முழு நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி டாலர் (15 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இவ்வாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 28 ஆயிரம் கோடி டாலர் (14 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு சில மாதங்களாக, ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால், வர்த்தக பற்றாக்குறையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஏற்றுமதி வளர்ச்சிநடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், ஏற்றுமதி அதிகரித்திருந்தது. அதேசமயம், இரண்டாவது அரையாண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. குறிப்பாக, சென்ற நவம்பர் மாதத்தில், ஏற்றுமதி ஒற்றை இலக்க அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 2,670 கோடி டாலராக இருந்தது. இது, ஆகஸ்ட் மாதத்தில், 2,480 கோடி டாலராகவும், செப்டம்பரில் 2,360 கோடி டாலராகவும், அக்டோபரில் 2,240 கோடி டாலராகவும், நவம்பரில் 2,232 கோடி டாலராகவும் படிப்படியாக குறைந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.நாட்டின் மொத்த ஏற்றுமதியில், ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 17 சதவீத அளவிற்கு உள்ளது. ஆனால், இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், இந்நாடுகளுக்கான ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 9,134 கோடி டாலராக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 7,445 கோடி டாலராக இருந்தது.
பொருளாதார நெருக்கடிநாட்டின் ஏற்றுமதி குறித்து இந்திய வெளிநாட்டு வர்த்தக பயிலகத்தின் இயக்குனர் கே.டி.சாக்கோ கூறியதாவது:ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால், நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாது. எனவே, 2,800 கோடி டாலர் அளவிற்கே ஏற்றுமதி இருக்கும். பொருளாதார நெருக்கடியால், ஐரோப்பிய நாடுகளில் தேவை குறைந்து போயுள்ளது. இருப்பினும், நம் ஏற்றுமதியாளர்கள் புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளனர். இதன் காரணமாக, ஏற்றுமதியை ஓரளவிற்கு நிலை நிறுத்த முடியும். இல்லாவிடில், ஏற்றுமதி 2,800 கோடி டாலருக்கும் கீழாக குறைந்து விடும்.ஏற்றுமதி குறைந்து வரும் அதே நேரத்தில், இறக்குமதி உயர்ந்து வருகிறது. ஆனால், உடனடியாக இறக்குமதியை குறைக்க முடியாது. ஏனெனில், நாட்டின் மொத்த இறக்குமதியில், 80 சதவீத அளவிற்கான இறக்குமதி ஒப்பந்தங்கள் முன்கூட்டியே எடுக்கப்பட்டவையாகும். இவ்வாறு சாக்கோ கூறினார்.
ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளதால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தற்போது, 11 ஆயிரத்து 683 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 9,300 கோடி டாலராக இருந்தது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் மொத்த ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 33.21 சதவீதம் வளர்ச்சியடைந்து, அதாவது, 14 ஆயிரத்து 465 கோடி டாலரிலிருந்து, 19 ஆயிரத்து 270 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, நடப்பு முழு நிதியாண்டில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி, 42.67 சதவீதம் அதிகரித்து, அதாவது, 6,600 கோடி டாலரிலிருந்து, 9,411 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் அல்லாத இதர பொருட்கள் இறக்குமதி 25.46 சதவீதம் உயர்ந்து, 17 ஆயிரத்து 170 கோடி டாலரிலிருந்து, 21 ஆயிரத்து 541 கோடி டாலராக உயர்ந்துள்ளது.வர்த்தக அமைச்சகத்தின் செயலர் ராகுல் குல்லார் நாட்டின் ஏற்றுமதி குறித்து அண்மையில் பேசும் போது,""நடப்பு முழு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 28 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கே இருக்கும் என்றும், வர்த்தக பற்றாக்குறை 15,500 - 16,000 கோடி டாலர் அளவிற்கே இருக்கும்'' என குறிப்பிட்டிருந்தார்.வர்த்தக பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில், கடந்த மே மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை மிகவும் அதிகபட்சமாக 1,930 கோடி டாலராக அதிகரித்திருந்தது. இதே போன்று சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, 3.87 சதவீதமாக சரிவடைந்து, 2,232 கோடி டாலராக குறைந்திருந்தது.கடந்த 2010-11ம் முழு நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 24 ஆயிரத்து 600 கோடி டாலராகவும், இறக்குமதி 35 ஆயிரத்து 30 கோடி டாலராகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு, வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடி டாலர் (25 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு உயர்த்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)