பதிவு செய்த நாள்
09 ஜன2012
16:10
புதுடில்லி: டுகாட்டி பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால், அந்த பைக்குகளின் விலை மற்ற நிறுவனங்களை காட்டிலும் அதிகமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது. இந்த குறையை போக்கும் விதமாக ரூ.6.99 லட்சம் விலையில் புதிய மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கை டில்லி ஆட்டோ கண்காட்சியில் டுகாட்டி அறிமுகம் செய்தது டுகாட்டி. ஆனால், ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலையில் டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஆட்டோ துறையினரும் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பிரிட்டனை சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் டுகாட்டி மான்ஸ்ட்டரை 795 விலையை விட குறைவான விலையில் தனது சூப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்ததும் டுகாட்டியை யோசிக்க வைத்துவிட்டது. இதையடுத்து, அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கின் விலையை ரூ.1 லட்சம் அதிரடியாக குறைத்துவிட்டது டுகாட்டி. இது அறிமுக சலுகை என அதற்கு சப்பை கட்டு காரணங்களையும் கூறி டுகாட்டி சமாளித்துள்ளது. இருப்பினும், மான்ஸ்ட்டர் 795 சூப்பர் பைக்கின் விலையை ரூ.5.99 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்வதாக டுகாட்டி அறிவித்துள்ளது சூப்பர் பைக் வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த விலை குறைப்பு.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|