பதிவு செய்த நாள்
13 ஜன2012
00:30
மும்பை:அதானி குழுமம், முந்த்ரா போர்ட் அண்டு ஸ்பெஷல் இக்கனாமிக் சோன் என்ற அதன் துணை நிறுவனத்தின் பெயரை, அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் இக்கனாமிக் சோன் என பெயர் மாற்றம் செய்துள்ளது. சர்வதேச அங்கீகாரம் பெறும் வகையில், இந்நிறுவனம், அதானி என்ற பெயர் இடம்பெறும் வகையில், நிறுவனத்தின் பெயரில் மாற்றம் செய்துள்ளது. தொடக்கத்தில், முந்த்ரா துறைமுக நடவடிக்கைகளை மட்டும் கவனித்து வந்ததால், இந்நிறுவனத்தின் பெயர் முந்த்ரா போர்ட் ஸ்பெஷல் இக்கனாமிக் சோன் என்று இருந்தது.
இந்நிலையில், இந்நிறுவனம் தற்போது, குஜராத் மாநிலத்தில் தஹேஜ் மற்றும் ஆஸ்திரேலியாவில், அபார்ட் பாயின்ட் ஆகிய இடங்களிலும் துறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவைதவிர, இந்தியாவில், ஹசீரா, மர்மகோவா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் துறைமுகங்களை அமைத்து வருகிறது. இதன் காரணமாகவே, அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் இக்கனாமிக் சோன் (ஏ.பி.எஸ்.ஈ.இசட். எல்.) என, பெயர் மாற்றம் செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|