உணவுப் பொருள் பணவீக்கம் 2.90 சதவீதம் எதிர்மறை வளர்ச்சிஉணவுப் பொருள் பணவீக்கம் 2.90 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி ... 2011ம் ஆண்டு நவம்பரில்...தொழில் துறை உற்பத்தி 5.9  சதவீதம் வளர்ச்சி 2011ம் ஆண்டு நவம்பரில்...தொழில் துறை உற்பத்தி 5.9 சதவீதம் வளர்ச்சி ...
நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி ரூ.6,209 கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2012
00:32

மும்பை:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 6,209 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 43 சதவீதம் (4,335 கோடி ரூபாய்) அதிகம் என, நறுமணப் பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு காலத்தில், அளவின் அடிப்படையில், நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 5 சதவீதம் சரிவடைந்து, 3 லட்சத்து 72 ஆயிரத்து 10 டன்னிலிருந்து, 3 லட்சத்து 51 ஆயிரத்து 900 டன்னாக குறைந்துள்ளது.
டாலர் மதிப்பின் அடிப்படையிலான நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 94.80 கோடி டாலரிலிருந்து, 133.20 கோடி டாலராக உயர்ந்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், அளவின் அடிப்படையில் 5 லட்சம் டன் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் எட்டு மாத காலத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 70 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், மிளகு ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11 ஆயிரத்து 850 டன்னிலிருந்து, 17 ஆயிரம் டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 217 கோடி ரூபாயிலிருந்து, 518 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சிறிய வகை ஏலக்காய் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 444 சதவீதம் உயர்ந்து, 570 டன்னிலிருந்து, 3,100 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 65 கோடி ரூபாயிலிருந்து, 253 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. பெரிய ஏலக்காய் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 18 கோடி ரூபாயிலிருந்து, 37 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், 380 டன்னிலிருந்து, 475 டன்னாகவும் உயர்ந்துள்ளது.மிளகாய் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 24 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 டன்னிலிருந்து, 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு,1,053 கோடி ரூபாயிலிருந்து, 1,266 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இஞ்சி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 163 சதவீதம் அதிகரித்து, 49 கோடியிலிருந்து, 130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,650 டன்னிலிருந்து, 11 ஆயிரத்து 250 டன்னாக உயர்ந்துள்ளது.தனியா ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 8 சதவீதம் சரிவடைந்து, 116 கோடியிலிருந்து, 107 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 41 சதவீதம் குறைந்து, 30 ஆயிரத்து 645 டன்னிலிருந்து, 18 ஆயிரத்து 200 டன்னாக சரிவடைந்துள்ளது.
மஞ்சள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் 15 சதவீதம் அதிகரித்து, 496 கோடியிலிருந்து, 71 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 63 சதவீதம் அதிகரித்து, 35 ஆயிரத்து 500 டன்னிலிருந்து, 58 ஆயிரம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.
பூண்டு ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 89 சதவீதம் சரிவடைந்து, 65 கோடியிலிருந்து, 7 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 94 சதவீதம் குறைந்து, 16 ஆயிரத்து 625 டன்னிலிருந்து, 1,075 டன்னாக சரிவடைந்துள்ளது.கறிமசாலா தூள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 16 சதவீதம் அதிகரித்து, 130 கோடியிலிருந்து, 164 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,875 டன்னிலிருந்து, 11 ஆயிரத்து 500 டன்னாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)