பதிவு செய்த நாள்
13 ஜன2012
16:04

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோவை மற்றும் சென்னைக்கு சிறப்பு விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா நிறுவனம்.இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையையொட்டி கோவையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவைக்கும் 2 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். ஜனவரி 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒரு விமானமும், 4 மணிக்கு இன்னொரு விமானமும் கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும்.15ம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கு ஒருவிமானமும், 1.20 மணிக்கு இன்னொரு விமானமும் சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படும். இந்த விமானத்தில் பயணிக்க ஒரு வழிக் கட்டணமாக ரூ. 1884 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|