பதிவு செய்த நாள்
14 ஜன2012
00:53
சென்னை:மகிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமான, மகிந்திரா 2 வீலர்ஸ் நிறுவனம், டியூரோ டீ.இசட், என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை) தர்மேந்திர மிஸ்ரா கூறியதாவது:இந்திய சாலைகளுக்கு ஏற்ப, நேர்த்தியான மற்றும் உறுதியான வகையில், டியூரோ டீ.இசட் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 125 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், உடனடி பிக்-அப் மற்றும் மல்டி டெரய்ன் ஆக்சிலரேஷனையும் தருகிறது. இதனால், கரடு முரடான, சரிவான பாதைகளில் வாகனத்தை ஓட்டிச் செல்வது மிக எளிதாகிறது.டியூரோ ஸ்கூட்டரில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, அதிகபட்சமாக 53 கிலோ மீட்டர் வரையில் செல்லாம். மேலும், டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், ஹாலோஜன் விளக்குகள், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கத்தில் அதிக பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளன. தமிழகத்தில் இதன் விலை, 45 ஆயிரத்து 235 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஸ்கூட்டர்கள் விற்பனையில், நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 7 சதவீதமாக உள்ளது. இதை, வரும் 4 மாதங்களுக்குள் 10 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|