களைகட்டியது பொங்கல் திருவிழா : கரும்பு,மஞ்சள் கிழங்கு குவிந்தது!களைகட்டியது பொங்கல் திருவிழா : கரும்பு,மஞ்சள் கிழங்கு குவிந்தது! ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
டேங்கர் லாரி ஸ்டிரைக்: தினமும் 20 லட்சம் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2012
11:52

காஸ் டேங்கர் லாரிகளின் திடீர், "ஸ்டிரைக்'கால், சிலிண்டர் நிரப்பும் மையங்களில், இரண்டு நாட்களுக்கு மட்டுமே காஸ் இருப்பு உள்ளது. இதனால் தினமும், 20 லட்சம் சிலிண்டர்கள் தேக்கமாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

"ஸ்டிரைக்' துவக்கம்: தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு, கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஊர்களிலிருந்து, தினமும், 3,600 டேங்கர் லாரிகளில், சமையல் காஸ் வினியோகம் நடக்கின்றன. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், டேங்கர் லாரிகளின் ஒப்பந்த காலம், கடந்த அக்டோபருடன் முடிந்துவிட்டது. புதிய ஒப்பந்தமிட்டு, வாடகையை உயர்த்த வேண்டும் என, டேங்கர் லாரி சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். டேங்கர் லாரி அதிபர்களின் கோரிக்கையை, எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத வரையில், வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டு, நேற்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கியது.

லாரி வரத்து குறைவு: இந்நிலையால், நேற்று முதல் சிலிண்டர் நிரப்பு மையங்களுக்கு, லாரிகள் வரத்து குறைந்துள்ளன. ஏற்கனவே சரக்கு ஏற்றி வந்த ஒரு சில லாரிகள் மட்டும், சிலிண்டர் நிரப்பு மையங்களுக்கு வந்து, சரக்கை இறக்கி சென்றுள்ளன. இதுகுறித்து, சிலிண்டர் நிரப்பு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி, சிலிண்டர் நிரப்பு மையங்களில், இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே, காஸ் இருப்பு உள்ளது. நாளை முதல் இரண்டு நாட்கள், பொங்கல் விடுமுறை என்பதால், செவ்வாய்க்கிழமை தான் சிலிண்டர் நிரப்பும் மையங்களில் பணிகள் துவங்கும். வியாழக்கிழமை முதல் சிலிண்டர்கள் நிரப்ப, காஸ் இருப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

20 லட்சம் சிலிண்டர்கள்: சமையல் காஸ் டேங்கர் லாரி ஒவ்வொன்றும், 18 டன் எடை கொண்ட காஸ் ஏற்றி வரும். ஒரு லாரியில் வரும் காஸ் மூலம், 1,300 சிலிண்டர்களை நிரப்ப முடியும். தற்போது, அனைத்து லாரிகளும் வேலைநிறுத்தம் செய்வதால், தினமும், 20 லட்சம் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு வினியோகிக்க மட்டுமே, சிலிண்டர்கள் இருப்பு உள்ளன. பொங்கல் விடுமுறை முடிந்ததும், வேலை நிறுத்தம் முடிந்தால் கூட, சிலிண்டர் நிரப்பு மையங்களுக்கு சரக்கு வந்து, பின் அங்கு சிலிண்டர் நிரப்பி ஏஜன்சிகளுக்கு காஸ் வர, ஒரு வாரம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

"முடிவுக்கு வாங்க...': இதுகுறித்து, காஸ் சிலிண்டர் ஏஜன்சிகள் சங்கத் தலைவர் ராமச்சந்தின் கூறும்போது, ""எண்ணெய் நிறுவனங்களும், லாரி அதிபர்களும் விரைவில் பேச்சு நடத்தி, பிரச்னையை சுமூக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளும், சிலிண்டர் வழங்கும் ஏஜன்சிகளுக்கு தான் பிரச்னை'' என்றார்.

பண்டிகையை குறிவைக்கும் "ஸ்டிரைக்': கடந்த இரு மாதங்களுக்கு முன், தீபாவளி பண்டிகையையொட்டி, சிலிண்டர் நிரப்பும் மையங்களின் தொழிலாளர்கள், போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். இதேபோல், சாலைகளை சரிசெய்யக் கோரி, லாரிகள் திடீர் வேலைநிறுத்தம் செய்தன. இந்த போராட்டத்தால், தேக்கமடைந்த சிலிண்டர் வினியோகத்திற்கே, 15 நாட்கள் வரை ஆகிறது. மீண்டும், மற்றொரு போராட்டம் துவக்கியுள்ளதால், சிலிண்டர் வினியோகிக்க, 20 நாட்களுக்கு மேலாகும் ஆபத்து உள்ளது.

பாதிக்காத மையம்: மணலியில் உள்ள சிலிண்டர் நிரப்பும் மையத்திற்கு மட்டும், மங்களூரில் இருந்து நேரடியாக, குழாய் மூலமாக காஸ் வருகிறது. அதனால், இந்த மையத்திலிருந்து, சிலிண்டர்கள் பெறும், சென்னையைச் சேர்ந்த சில ஏஜன்சிகளுக்கு, சிலிண்டர் தட்டுப்பாடு வராது.

- ஹெச்.ஷேக் மைதீன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)