பதிவு செய்த நாள்
15 ஜன2012
02:14

சென்னை:பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் நிறுவனம், அதன் குளிர்பானங்கள் விற்பனையை மேம்படுத்த திட்டமிட் டுள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் செயல் துணை தலைவர் (சந்தைப்படுத்துதல்- குளிர்பானங்கள் பிரிவு) ருச்சிரா ஜெட்லி கூறியதாவது:நிறுவனத்தின் அனைத்து வகை குளிர்பானங்களுக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எலுமிச்சை சுவை கொண்ட குளிர்பானங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தற்போது "7அப்' மற்றும் "நிம்பூஸ்' குளிர்பானங்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, "7அப்' குளிர்பானத்தை மையமாகக் கொண்டு நடனம், விளையாட்டு போட்டிகள் ஆகி யவை நடத்தப்பட உள்ளன. நிறுவனத்தின் குளிர்பானங்கள் வரிசையில், "7 அப்' இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு ருச்சிரா கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|