பதிவு செய்த நாள்
15 ஜன2012
02:15

மும்பை:தங்கம் விற்பனை செய்ய, மேலும் 4 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, யெஸ் பேங்க், பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா, ஐ.என்.ஜி வைஸ்யா, சிட்டி யூனியன் பேங்க் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தங்கம் விற்பனை செய்யும் வங்கிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் அனுமதியின் பேரில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், தங்க கட்டிகள், தங்க நாணயங் கள், வெள்ளிக் கட்டிகள், வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றன.மேலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கீதாஞ்சலி எக்ஸ் போர்ட்ஸ் நிறுவனங்களுக்கும், தங்கம், வெள்ளி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள் ளது.முந்தைய 2010ம் ஆண்டு, 958 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது, சென்ற 2011ம் ஆண்டு 878 டன்னாக குறைந்திருக் கும் என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|