பதிவு செய்த நாள்
15 ஜன2012
02:16

சென்னை:வெளிநாடுகளில் வசிப்போர், தங்கள் தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்புவதில், இந்தியர்கள் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.சென்ற 2011ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், 5,780 கோடி டாலரை, இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2010ம் ஆண் டில், 5,400 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், வெளிநாடு வாழ் சீனர்கள், தங்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், 5,300 கோடி டாலரில் இருந்து, 5,730 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், வெளிநாடு வாழ் மெக்சிகோவினர் அனுப்பிய பணம், 2,200 கோடி டாலரில் இருந்து, 2,360 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டினர் அனுப்பிய தொகை, 2,140 கோடி டாலரில் இருந்து, 2,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அயல்நாட்டில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டினர், தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய பணம், 1,560 கோடி டாலரில் இருந்து, 1,640 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு, செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பிய தொகை, 13.3 சதவீதம் உயர்ந்து, 4,560 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்தில் உள்ள தங்கள் குடும்பத்திற்கு அனுப்பிய தொகையில், வங்கி டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, சரிவடைந்துள்ளதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதிக ஆதாயம் பெறும் நோக்கோடு, கூடுதலாக பணம் அனுப்பி வருகின்றனர். இத்தொகை, நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|