பதிவு செய்த நாள்
15 ஜன2012
02:18

புதுடில்லி:சென்ற டிசம்பரில், மோசமான வானிலை காரணமாக, நாட்டின் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.இந்தியாவின், மொத்த தேயிலை உற்பத்தியில், நான்கில் மூன்று பங்கை வடமாநிலங்கள் கொண்டுள்ளது.
மேலும், நாட்டின் தேயிலை உற்பத்தியில், அசாம் மாநிலம், 50 சதவீத பங்களிப்பை கொண்டு, முதல் இடத்தில் உள் ளது. சென்ற 2011ம் ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், மழை பொய்த்ததாலும், மோசமான வானிலை யாலும், நாட்டின் தேயிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது.
சென்ற நவம்பர் மாதத்தில், வடமாநிலங்களில், 6.60 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட,7 சதவீதம் (7 கோடிகிலோ) குறைவு.
மதிப்பீட்டு காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 10 சதவீதம் குறைந்து,4.12 கோடி கிலோவிலிருந்து, 3.70 கோடி கிலோவாக குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில்,இதன் உற்பத்தி, 3 சதவீதம் குறைந்து, 2.64 கோடி கிலோ விலிருந்து, 2.57 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.
சென்ற அக்டோபர் மாதத்தில், 11.74 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 3 சதவீதம் (12 கோடி கிலோ) குறைவு.இதே காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 2 சதவீதம் குறைந்து, 7.2 கோடி கிலோவிலிருந்து, 7 கோடி கிலோவாக குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில், 10 சதவீதம் குறைந்து, 2.54 கோடி கிலோவிலிருந்து, 2.29 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|