தாயகத்திற்கு பணம்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம்தாயகத்திற்கு பணம்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம் ... நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.15,750 கோடி சரிவு நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.15,750 கோடி சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தையின் முன்னேற்ற நிலை தொடருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2012
02:22

புது வருடமும் பிறந்து விட்டது. பொங்கலும் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது. சந்தைகளில், பல பொருட்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஒரு சில மாதங்களாக, சோம்பிக் கிடந்த பங்கு வர்த்தகத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதே முதலீட்டாளர்களின் ஆவலாகும்.
நடப்பு வாரத்தில், கட்டுமானம், வங்கி, உலோகம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.செவ்வாய்கிழமையன்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்ததால், அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 350 புள்ளிகள் அதிகரித்தது. இது, கடந்த ஒரு மாத காலத்தில், அதிகபட்ச நிலையாகும். பங்குச் சந்தையும் கடந்த இரண்டு வாரங்களாக லாபத்தில்தான் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமையன்று, "சென்செக்ஸ்' 117 புள்ளிகள் அதிகரித்து, 16,155 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 35 புள்ளிகள் உயர்ந்து, 4,866 புள்ளிகளிலும் நிலை பெற்றன. நடப்பு வாரத்தில் மட்டும், "சென்செக்ஸ்' 340 புள்ளிகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை உற்பத்தி:கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 5.1 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சி கண்டு பின்னடைவில் இருந்தது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி மை னசி-ல் இருந்து ப்ளஸ்சு-க்கு வந்தது மட்டுமில்லாமல், 5.9 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உயர்ந்திருந்தது. இது, பங்குச்சந்தையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, அதன் நிதி ஆய்வு கூட்டத்தில் குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும், பங்குச் சந்தைக்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது. குறிப்பாக, கடந்த ஒரு சில மாதங்களாக, பின்னடைவை கண்டிருந்த, வங்கிப் பங்குகளின் விலை அதிகரித்தது.
காலாண்டு முடிவுகள்:நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை,நிறுவனங்கள் வெளியிட துவங்கியுள்ளன.இக்காலாண்டில்,இண்டஸ்இந்த் பேங்க்,டெவலப் மென்ட் கிரெடிட் பேங்க், திரிவேணி டர்பைன், குரு பைனான்ஸ், எச்.டீ.எப்.சி., இன்போசிஸ், போன்ற நிறுவனங்களின் லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட அதிகரித்துள்ளன.
இருப்பினும், இன்போசிஸ் நிறுவனத்தின், நான்காவது காலாண்டு மற்றும் முழு நிதியாண்டிற்கான லாபம் மதிப்பீட்டையொட்டி உயருமா என்பது சந்தேகம்தான் என நிறுவனம் தெரிவித்தது. இது குறித்த அறிவிப்பு வெளியான வியாழனன்று, பங்கு வர்த்தகம் சற்று சுணக்கம் கண்டது. அன்றைய தினம், இந்நிறுனப் பங்கின் விலை 6 சதவீதம் குறைந்து போனது.
ரூபாய் மதிப்பு உயர்வு:கடந்த ஒரு சில மாதங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் சரிவடைந்திருந்தது. ஆனால், நடப்பு வாரத்தில், ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. இதற்கு, அயல்நாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில் வைத்துள்ள சேமிப்பு கணக்கிற்கு அதிகளவில் தொகை அனுப்புவது தான் காரணம்.
முன்பு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், தற்போது அந்த வங்கி, டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை வங்கிகளே தீர்மானித்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. முதலீட்டிற்கு அதிக வட்டி கிடைப்பதால், அயல்நாடு வாழ் இந்தியர்கள் அதிகளவில் அன்னியச் செலாவணியை குவிக்க துவங்கியுள்ளனர். செலாவணி வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் உயரத் துவங்கியுள்ளது.
ஏர் ஏஷியா:குறைந்த கட்டணத்தில், இந்தியர்களுக்கு வெளிநாடுகளை சுற்றி காண்பித்து வந்த, ஏர் ஏஷியா விமான சேவை நிறுவனம், இந்தியாவில் இருந்து மேற்கொள்ளும், அதன் போக்குவரத்து சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு, விமான எரிபொருள் செலவும், வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது தான் காரணம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மலேசியாவும், சிங்கப்பூரும், சாதாரண மக்களுக்கு அதிக தூரமாகி விடும். இச்சூழ்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 17 விமானங்களை வாங்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
பணவாட்டம்:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக பண வாட்டமாக அதாவது, எதிர்மறை வளர்ச்சி நிலைக்கு சென்றுள்ளது. தற்போது, உணவுப் பொருட்கள் விளைந்து கெடுக்கின்றன. அதாவது, வடமாநிலங்களின் மொத்த விலைச் சந்தையில், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 1 ரூபாயாகவும், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 2.50 ரூபாய்க்கும் விலை போகின்றன. நல்ல சேமிப்பு கிடங்கு வசதிகள் இருந்தால், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க முடியும் என்பதுடன், நாடும் சுபிட்சமாக இருக்கும்.
பாட்டா இந்தியா:உள்நாட்டில், பாட்டா என்ற பெயரைக் கேட்டால் குழந்தைகள் கூட காலணிகள் விற்கும் கடை என்று கூறிவிடும். அந்தளவிற்கு, "பாட்டா' மிகவும் பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது. முன்பெல்லாம், ஒரு ஆளுக்கு ஒரு ஜோடி காலணிகள் தான் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால், தற்போது, பலர், பல ஜோடி காலணிகளை வைத்துக் கொள்வது என்பது சாதாரணமாகி விட்டது. சேலைகளின் வண்ணத்திற்கு ஏற்ப காலணிகள் அணிந்து கொள்வது பேஷனாக உள்ளது.
இந்த போக்கை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பாட்டா நிறுவனம், 20 ஆயிரம் சதுர அடியில் பெரிய அளவில் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம், "சிங்கிள் பிராண்டு' சில்லரை வணிகத்தில், 100 சதவீத அன்னிய முதலீட்டால், பாட்டா போன்ற கடைகளுக்கு பலத்த போட்டி ஏற்படக்கூடும். இது, இந்நிறுவனத்தின் செயல்பாட்டில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இந்நிறுவனத்தின் காலணிகள் விற்பனை அதிகரித்து வருகிறது. நீண்ட கால அடிப்படையில், இதன் பங்குகளை வாங்கலாம்.
வரும் வாரம் எப்படி இருக்கும்?:கடந்த இரண்டு வார நிலையை பார்க்கும் போது, வரும் வாரத்திலும், பங்குச் சந்தையில், சற்று முன்னேற்றம் இருக்கும் என தோன்றுகிறது. பொதுப் பணவீக்கம் மேலும் குறைந்தால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கக்கூடும். அதேசமயம், ஐரோப்பிய நிலவரங்கள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களை பொருத்தே சந்தையின் போக்கு அமையும்.
- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)