பதிவு செய்த நாள்
15 ஜன2012
02:25

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜன., 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 315 கோடி டாலர் (15 ஆயிரத்து 750 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29 ஆயிரத்து 350 கோடி டாலராக (14 லட்சத்து 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது, டிச., 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 420 கோடி டாலர் (21 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்து, 29 ஆயிரத்து 670 கோடி டாலராக (14 லட்சத்து 83 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருந்தது.
இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு,310 கோடி டாலர் (15 ஆயிரத்து 500 கோடிரூபாய்) சரி வடைந்து, 25 ஆயிரத்து 981 கோடி டாலராக (12லட்சத்து 99ஆயிரத்து 50 கோடிரூபாய்) குறைந்துள்ளது.எஸ்.டீ. ஆர்., மதிப்பும், 1.48 கோடி டாலர் (74 கோடி ரூபாய்) சரிவடைந்து, 440 கோடி டாலராக (22,000 கோடி ரூபாய்) குறைந் துள்ளது. சர்வதேச நிதியத்தில் நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 91 லட்சம் டாலர் (4,550 கோடி ரூபாய்) குறைந்து, 270 கோடி டாலராக (13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்)சரிவடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ உள்ளிட்ட, இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள, அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|