பதிவு செய்த நாள்
21 ஜன2012
00:17

தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த விப்ரோ நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 1,456 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின், இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 10.43 சதவீதம் (1,314 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர வருவாய், 7,829 கோடியிலிருந்து, 9,997 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நான்காவது காலாண்டில், தகவல் தொழில்நுட்ப பணிகள் மூலமான வருவாய், 1-3 சதவீதம் அதிகரித்து, 152 கோடி டாலர் முதல் 155 கோடி டாலர் வரை அதிகரிக்கும் என இந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு 100 சதவீத இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.
இதன் மூலம், 2 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 2 ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக கிடைக்கும். இந்நிறுவனம், மூன்றாவது காலாண்டில், 39 புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இது தவிர,5,004 பணியாளர்களையும் புதிதாக பணிக்கு சேர்த்துக் கொண்டுள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.36 லட்சமாக உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|