பதிவு செய்த நாள்
21 ஜன2012
00:22

சென்னை,கோல் அண்டு ஆயில் குழுமத்தைச் சேர்ந்த கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம், 5,200 கோடி ரூபாய் திட்ட செலவில், தூத்துக்குடியில், 1,200 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைத்து வருகிறது. இத்திட்டம், இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அகமது ஏ.ஆர்.புகாரி கூறியதாவது:தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில், மின் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. நிறுவனம், தூத்துக்குடியில் 1,200 மெகா வாட் திறன் கொண்ட முட்டியாரா அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை, 2006ம் ஆண்டு டிசம்பரில் துவக்கியது. இதற்கு தேவையான பாய்லர், டர்பைன் மற்றும் ஜெனரேட்டர்கள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மின் வினியோகத்திற்காக, பவர் கிரிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவிலிருந்து, ஆண்டுக்கு, 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. நிறுவனத்தின், மொத்த மின் உற்பத்தியில், அதிகளவு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்யப்படும். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.டாட்டா நிறுவனத்திற்கு, 500 மெகா வாட் மின்சாரம் வழங்கும் வகையில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள மின்சாரம், மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு அகமது புகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|