நடப்பு 2012ம் ஆண்டில்...இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கை சூடுபிடிக்கும்நடப்பு 2012ம் ஆண்டில்...இணைத்தல், கையகப்படுத்துதல் நடவடிக்கை சூடுபிடிக்கும் ... சிமெண்டு விலை உயரும் வாய்ப்பு சிமெண்டு விலை உயரும் வாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம் திவால் நோட்டீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
09:52

நியூயார்க்: புகழ் பெற்ற "கோடக்' புகைப்படக் கருவி (கேமரா) நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.அமெரிக்காவின் "கோடக்' நிறுவனம், புகைப்படக் கருவி, படச் சுருள் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம், மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால், 2003 முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது. கடந்த 2003 முதல், இதுவரை, தனது 13 படச் சுருள் மற்றும் புகைப்படக் கருவி தயாரிப்பு நிலையங்களை மூடிய இந்நிறுவனம், 47 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பியது. ஒரு காலத்தில், சந்திரனில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்டாங் கால்பதித்த காட்சியை வெளியிட, இந்த நிறுவன படச் சுருள் உதவி வரலாற்றில் இடம் பெற்றது.
இந்நிலையில் இந்நிறுவனம், அமெரிக்க அரசிடம், திவால் நோட்டீஸ் (சாப்டர் 11) சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள், தனிநபர்களிடம் வாங்கிய கடனை, இந்நிறுவனம் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல செலுத்தும். இந்த திவால் நோட்டீஸ், அமெரிக்காவில் இயங்கும் வர்த்தகத்திற்கு மட்டுமே என, கோடக் ஆசியா பிரிவின், சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் பி.என்.ரகுவீர் தெரிவித்தார். இந்தியாவில்...: இந்தியாவில் கோடக் நிறுவனத்தின் வர்த்தகம் நல்ல முறையில் இயங்கி வருவதால், வாடிக்கையாளர்களும், சில்லரை வியாபாரிகளும் இந்நிறுவனத்துடனான வர்த்தகத்தை, இப்போது உள்ளபடியே தொடரலாம் எனவும் உறுதியளித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)