பதிவு செய்த நாள்
21 ஜன2012
10:09

புதுடில்லி: சிமெண்டு விலை 50 கிலோ மூட்டைக்கு ரூ.9 உயரும் என பிரபல ஆய்வு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. இம்மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி விலை உயர்வு சிமெண்டு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. 2011 டிசம்பர் மாதத்தில் தேவை 13.4 சதவீதம் அதிகரித்திருந்த நிலையிலும், நவம்பர் மாதத்தை விட 1 சதவீதம் குறைவாக டிசம்பரில் 50 கிலோ மூட்டை சிமெண்டின் விலை ரூ.285 ஆக இருந்தது.
தற்சமயம் கட்டுமான பணிகள் உத்வேகம் பெற்று வருவதால் சிமெண்டுக்கான தேவை அதிகரிக்கும் என கிரிசில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய் டிசௌசா கூறியுள்ளார்.நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் சிமெண்டு விற்பனை முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 5.90 சதவீதம் அதிகரித்து 16.03 கோடி டன்னாக உயர்ந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|