பதிவு செய்த நாள்
21 ஜன2012
13:56

ஈரோடு : மத்திய அரசு நிதியுதவியுடன், 14.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈரோடு மாவட்ட கால்நடை பெரு மருத்துவமனையை இடித்து, புதிய கட்டிடம் கட்டமைப்பு பணி துரிதமாக நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தலைமையிடமாக ஈரோடு கால்நடை பெருமருத்துவமனை திகழ்கிறது. 1915 மே 26ல், அன்றைய வருவாய்த் துறையால் இம்மருத்துவமனை அரசாணை நிலை எண்- 2203ன் படி. 2.08 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது. 1981 ஜூலை 15ல் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், துணை இயக்குநர் அலுவலகம், நோய் புலனாய்வு பிரிவு, கோழி நோய் ஆராய்ச்சிக் கூடம், உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை பெரு மருத்துவமனை ஆகியவை உள்ளன. இதில் கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் பிரதம மருத்துவ அலுவலகத்தை, 1982 டிச., 10ல் கட்டிமுடிக்கப்பட்டது. இதை அன்றைய சமூக நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் கோமதி சீனிவாசனால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் கால்நடைகளின் உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை கூடம், பண்டக வைப்பறை ஆகியவை உள்ளன.
ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும்,. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சை பெறுகின்றன. இவற்றில் கோபி, வெள்ளகோவில், காங்கேயம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு சிகிச்சைக்காக வரும் கால்நடைகளுக்கு தமிழ்நாடு மருந்து வாணிபக் கழகம் மூலம் மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் இங்கு வரும் மாடுகளுக்கு சப்பைநோய், வெக்கை நோய், தொண்டை அடைப்பான், கோமாரி நோய் ஆகியவை குறித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோழி நோய் ஆராய்ச்சிக் கூடத்துக்கு சிகிச்சைக்காக வரும் கோழிகளுக்கு இராணிகட், புறஅம்மை, கோழி அம்மை ஆகியவை குறித்து தடுப்பூசி போடப்படுகிறது.
கால்நடை பெரு மருத்துவமனையில் உள்ள பிரதம மருத்துவமனை வளாகத்தின் உட்பகுதி மற்றும் மாடியில் உள்ள அறைகள் முழுவதும் பழுதடைந்து கீழேவிழ காத்திருக்கிறது. இதன் மேல் தளம் மற்றும் கீழ் தளத்தின் மேல் பகுதி இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மருத்துவமனையின் பின்பகுதியில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது.
பழைய கட்டிடத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததால் டாக்டர்கள் மரத்தடியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க துவங்கினர். மேலும் இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறங்கமின்றி டாக்டர்கள் கால்நடைகளுக்கு மரத்தடி வெட்டவெளியில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். கால்நடைகளுக்கு உயிர்நாடியாக விளங்கும் இம்மருத்துவமனையை இடித்து, புதிய கட்டிடம் அமைக்கும் பணி, மத்திய அரசு நிதியுதவி, 14.90 லட்சம் ரூபாயில் துவங்கியுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|