பதிவு செய்த நாள்
21 ஜன2012
15:47

குற்றாலம்:தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி அதிக விளைச்சல் காரணமாக போதிய விலையில்லாததால் மல்லி பயிரிட்ட விவசாயிகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர். தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, வீ.கே.புதூர், கழுநீர்குளம், மேலப்பாவூர் போன்ற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக கருதப்பட்டு ஒருபோகம் நெல் பயிரும், மறுபோகம் தோட்ட கறவை அதாவது கிணற்று பாசனம் மூலம் காய்கனிகள் மற்றும் மல்லி பயிரிடுவது வழக்கம்.கடந்த சில மாதங்களுக்கு முன் கார்பருவத்தின் போது இப்பகுதிகளில் மல்லி பயிரிடப்பட்டு அமோக விளைச்சல் ஏற்பட்டு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆழ்ந்த மகிழ்ச்சியடைந்து வந்த நிலையில் திடீரென வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மல்லி இலை அழுகும் நிலை ஏற்பட்டது. விலை இருந்தும் உரிய மல்லி இலை இல்லாததால் மல்லி பயிரிட்ட விவசாயிகள் ஆழ்ந்த கவலையடைந்து வந்தனர்.இந்நிலையில் தற்போது மல்லி இலை அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. கடும் பனியிருந்த போதும் மல்லி இலை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இப்பகுதியில் செழித்தோங்கி காணப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் வரை கிலோவிற்கு ரூ.40 வரை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லி இலை தற்போது கிலோ ரூ.3 வரை விற்கப்பட்டு வருவதால் மல்லி இலை இருந்தும் உரிய விலையில்லையே என மல்லி பயிரிட்ட விவசாயிகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|