பதிவு செய்த நாள்
23 ஜன2012
00:09
புதுடில்லி: நாட்டின் ஒரு சில மாநிலங்களில், போதிய அளவிற்கு மழைப் பொழிவு இல்லாததால், நடப்பு கரீப் பருவத்தில் பயிரிடப்படும் பரப்பு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத னால், ஒட்டு மொத்த அளவில் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட ஒரு சில தானிய வகைகளின் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ராஜஸ்தான்குறிப்பாக, ராஜஸ்தானில் மழைப் பொழிவு குறைந்ததால், கடுகு மற்றும் வெள்ளை கடுகு உற்பத்தி குறையக்கூடும். ஏனெனில், இம்மாநிலத்தில், கடுகு பயிரிடும் பரப்பளவு, நடப்பு கரீப் பருவத்தில், 26.41 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு கரீப் பருவத்தில், 32 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. நாடு தழுவிய அளவிலும் கடுகு பயிரிடப்படும் பரப்பளவு, 71.11 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 69.30 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாரஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும், வடகிழக்கு பருவமழை குறைந்ததால், இம்மாநிலங்களில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 6.56 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.கோதுமைஅதேசமயம், கோதுமை பயிரிடப்படும் பரப்பளவு 2.91 கோடி ஹெக்டேரிலிருந்து, 2.94 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. நாட்டின் பல பாகங்களில், கோதுமை சாகுபடி முழு அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நடப்பு கரீப் பருவத்தில், கோதுமை உற்பத்தி எதிர்பார்த்த அளவிற்கு மேலாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில், கோதுமை சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டு கரீப் பருவத்தை விட, 6 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. இதே போன்று, ராஜஸ்தான் மாநிலத்திலும், கோதுமை பயிரிடும் பரப்பளவு 3.11 லட்சம் ஹெக்டேர் உயர்ந்துள்ளது.பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் பரப்பளவு, கடந்த கரீப் பருவத்தை விட, நடப்பு கரீப் பருவத்தில் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு கரீப் பருவத்தில், பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் பரப்பளவு, 1.46 கோடி ஹெக்டேராக இருந்தது. இது, தற்போது 1.45 கோடி ஹெக்டேராகக் குறைந்துள்ளது.இதர தானியங்கள்மேலும், இதர தானிய வகைகள் சாகுபடி செய்யும் பரப்பளவும், 9.33 கோடி ஹெக்டேரிலிருந்து, 8.93 கோடி ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இருப்பினும், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில், இதர தானியங்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வட மாநிலங்களில், நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சற்று குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|