பதிவு செய்த நாள்
24 ஜன2012
09:38

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36.48 புள்ளிகள் அதிகரித்து 16788.21 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.50 புள்ளிகள் அதிகரித்து 5050.75 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும், பங்கு வியாபாரம் குறிப்பிடும்படியாக இல்லை. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட ஒரு சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு இல்லாததும், ரிசர்வ் வங்கி, இன்று அதன் நிதிக் கொள்கையை வெளியிட உள்ளதாலும், பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருந்து ஒதுங்கி இருந்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|