பதிவு செய்த நாள்
25 ஜன2012
00:08

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி அதன் ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, பொறியியல், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது.
இந்நிலையில், அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக
49 ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும் வர்த்தகம் முடியும்போது 50.07 ரூபாயில் நிலை கொண்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 244.04 புள்ளிகள் அதிகரித்து, 16,995.77 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,050.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,770.01 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை <அதிகரித்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.அதேசமயம், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 81.10 புள்ளிகள் உயர்ந்து, 5,127.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,141.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,049.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|