ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 17 சதவீதம் சரிவுஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 17 சதவீதம் சரிவு ... நடப்பு நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் குறையும் - பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து - நடப்பு நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் குறையும் - பிசினஸ் ... ...
உருக்கு உற்பத்தி 7 கோடி டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2012
02:16

புதுடில்லி:சென்ற 2011ம் ஆண்டில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 5.7 சதவீதம் உயர்ந்து 7.22 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டு 6.83 கோடி டன்னாக இருந்தது. இதே ஆண்டுகளில், சர்வதேச உருக்கு உற்பத்தி, 6.8 சதவீதம் உயர்ந்து 152.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. உலகளவில் உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
சென்ற ஆண்டு, சீனாவின் உருக்கு உற்பத்தி, 8.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 69.55 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி, 7.1 சதவீதம் வளர்ச்சியடைந்து, 10.80 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், ஜப்பானின் உருக்கு உற்பத்தி, 1.8 சதவீதம் குறைந்து, 10.80 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்தியாவில், விற்பனைக்கான உருக்கு உற்பத்தி, 7.5 சதவீதம் உயர்ந்து, 5.2 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், உருக்கு பயன்பாடு, 4.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.86 கோடி டன்னிலிருந்து, 5.08 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதி, 22.7 சதவீதம் உயர்ந்து, 24.60 லட்சம் டன்னிலிருந்து, 30.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், உருக்கு இறக்குமதி, 10.2 சதவீதம் குறைந்து, 53 லட்சம் டன்னிலிருந்து, 48 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், கட்டுமானம், மோட்டார் வாகனம் போன்ற துறைகளில், மந்த நிலை ஏற்பட் டதால், உருக்கு பயன்பாடு மந்தமடைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)