பதிவு செய்த நாள்
30 ஜன2012
01:30
சென்னை:நடப்பு நிதியாண்டு முடிய இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வரி சேமிப்பிற்கும்,செல்வ வளர்ச்சிக்கும் வழி காட்டக் கூடியவையாக, இ.எல்.எஸ்.எஸ். (பங்கு சார்ந்த சேமிப்பு) பரஸ்பர நிதி திட்டங்கள் விளங்குகின்றன.பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய இத்திட்டங்களுக்கு, வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இத் திட்டங்களில் சேரவும், வெளியேறவும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மேலும், முதிர்ச்சி காலத்திற்குப் பிறகு பெறும் தொகைக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
பல்வேறு பரஸ்பர நிதி நிறுவனங்கள், இ.எல்.எஸ்.எஸ். திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இவற்றுள் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்சியல் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின், ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்சியல் டாக்ஸ் பிளான் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக, சிறப்பான வருவாயை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில், சராசரியாக 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் மீதான வருவாய், 35.63 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதே வகையில், கனரா ரொபெக்கோ ஈக்யுட்டி டாக்ஸ் சேவர் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடு மீதான வருவாய் 33.29 சதவீதமாக உள்ளது.அது போன்று, இதே முதிர்வு காலத்தைக் கொண்ட எச்.டீ.எப்.சி. டாக்ஸ் சேவர் (32.82 சதவீதம்), ஐ.என்.ஜி டேக்ஸ் சேவிங்ஸ் (30.61), பிடிலிட்டி டாக்ஸ் அட்வான்டேஜ் (30.51), எச்.டீ.எப்.சி. எல்.டி. அட்வான்டேஜ் (30.16), பிராங்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு (30.05), சகாரா டாக்ஸ் கெயின் (29.43), ரெலிகேர் டாக்ஸ் பிளான் (29.18), குவாண்டம் டாக்ஸ் சேவிங் (28.88) ஆகிய திட்டங்களின் வருவாய் உள்ளது.
இ.எல்.எஸ்.எஸ். பரஸ்பர நிதி திட்டங்களில், மொத்தமாக முதலீடு செய்வதை விட, எஸ்.ஐ.பி. முறையில், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வருவது சிறந்தது. இதனால், பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்திலும், இத்திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, சராசரி வளர்ச்சியைக் கண்டு வரும்.இதனால், எஸ்.ஐ.பி. முறையில், பங்கு சார்ந்த இ.எல்.எஸ்.எஸ். பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடும் வளரும். வரிச் சலுகையும் கிடைக்கும். ஆக, இத்திட்டங்கள் வரிச் சேமிப்பு, செல்வ வளர்ச்சி என இரு வகையான ஆதாயத்தை வழங்கக் கூடியவையாக உள்ளன என்றால் அது மிகையாகாது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|