பதிவு செய்த நாள்
31 ஜன2012
14:24

மதுரை:சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்ய, கிராமமக்கள் தங்கள் மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது குறித்த பயிற்சியை, பெட்ரோலிய நிறுவனங்கள் தர மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. காஸ் நிறுவன ஏஜன்சிகளில் இதுவரை சிலிண்டர் பதிவை, பொதுமக்கள் போன் மூலமே மேற்கொண்டனர். பதிவை இனி எஸ்.எம்.எஸ்., மூலம் மேற்கொள்ள வேண்டும் என, வாடிக்கையாளர்களிடம் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளன. மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது குறித்து கிராமமக்களுக்கு தெரிவதில்லை. மாவட்ட வினியோக அலுவலர் சுந்தரேசன் கூறியதாவது; "காஸ் சிலிண்டர்' பதிவில் முறைகேடை தவிர்க்கவே வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுவதால், பதிவு சீனியாரிட்டியை காஸ் ஏஜன்சிகள் மீறி (ஓவர்லுக்) வேண்டியவர்களுக்கு சலுகை காட்ட முடியாது. சிலிண்டர் பதிவுக்கு ஒவ்வொருவரும் எப்படி எஸ்.எம்.எஸ்., அனுப்புவது என்பது குறித்த பயிற்சியை கிராமக்களுக்கு அளிக்கும்படி காஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி எந்த தேதியில், எந்த காஸ் கம்பெனிகள் எங்கு இப்பயிற்சியை அளிக்கின்றன என்பது குறித்த விபரங்கள் விரைவில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என, தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|