பதிவு செய்த நாள்
01 பிப்2012
01:32

சென்னை:தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 521 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 638 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 45.20 சதவீதம் வளர்ச்சியடைந்து, 3,453 கோடி ரூபாயிலிருந்து, 5,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், இவ்வங்கியின் மொத்த வர்த்தகம், 33.02 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 25 ஆயிரத்து 191 கோடி ரூபாயிலிருந்து, 2 லட்சத்து 99 ஆயிரத்து 555 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதில், வழங்கப்பட்ட கடன்கள், 32.38 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 129 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 32 ஆயிரத்து 549 கோடி ரூபாயாகவும், திரட்டிய டெபாசிட்கள், 33.54 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 25 ஆயிரத்து 62 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 67 ஆயிரத்து 6 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளன. இவ்வங்கி, இடர்பாட்டிற்காக, 714 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், இதன் நிகர லாபம் குறைந்துள்ளது என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|