பதிவு செய்த நாள்
01 பிப்2012
01:36

சென்னை:சிட்டி யூனியன் பேங்க், உரிமை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான என்.காமகோடி தெரிவித்தார்.வங்கி, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 75.24 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 25.20 சதவீதம் (57.70 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 40.09 சதவீதம் வளர்ச்சியடைந்து, 349.29 கோடியிலிருந்து, 489.33 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இவ்வங்கியின் மொத்த வர்த்தகம், 29 சதவீதம் வளர்ச்சியடைந்து, 26 ஆயிரத்து 439 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கி, அதன் நிதி ஆதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள பங்குதரார்களுக்கு, உரிமை பங்கு வெளியிட்டு, 400 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. மேலும், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், புதிதாக, 14 கிளைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை, 300ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என காமகோடி மேலும் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|