பதிவு செய்த நாள்
01 பிப்2012
01:41

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், அந்நாடுகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில், பல நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மின்சாரம், ரியல் எஸ்டேட், பொறியியல், மோட்டார் வாகனம், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 330.25 புள்ளிகள் உயர்ந்து, 17,193.55 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,238.99 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,965.58 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஒ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசூகி இந்தியா, கோல் இந்தியா ஆகிய ஐந்து நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய, 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.
இப்பங்குச் சந்தையில், 1,680 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 1,124 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும், 142 நிறுவன பங்குகளின் விலையில் மாற்றமின்றியும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 111.95 புள்ளிகள் அதிகரித்து, 5,199.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,215.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,120.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|