பதிவு செய்த நாள்
01 பிப்2012
09:19

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.07 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.91 புள்ளிகள் குறைந்து 17179.64 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.10 புள்ளிகள் குறைந்து 5198.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், அந்நாடுகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில், பல நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|