பதிவு செய்த நாள்
01 பிப்2012
12:08

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், "டசால்ட் ஏவியேஷன் ராபல்' என்ற விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, இந்திய விமானப் படை, 126 அதி நவீன போர் விமானங்களை வாங்கவுள்ளது. ராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களில், பிரமாண்டமான ஒன்றாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், இந்திய விமானப் படைக்கு, அதி நவீன போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக, சர்வதேச அளவில் பிரலமான போர் விமான தயாரிப்பு நிறுவனங்களை அணுகவும், முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவின் மிக்-35, அமெரிக்காவின் எப்-பால்கான், போயிங் எப்-18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரீபன், ஐரோப்பாவின் டைபூன் மற்றும் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் ராபல் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய விமானப் படைக்குத் தேவையான விமானங்களை வழங்க முன்வந்தன. ஏலத்தின் மூலம், விமான நிறுவனத்தை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு, இது தொடர்பான டைபூன் மற்றும் ராபல் ஆகிய நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன. இதில், ஏதாவது ஒரு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, ஏலம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், இதற்கான ஏலத்தில் குறைந்த விலையை குறிப்பிட்ட ராபல் நிறுவனம், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும், அடுத்த ஆண்டில் தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 50 ஆயிரம் கோடி ரூபாய்: இந்த ஒப்பந்தப்படி, இந்திய விமானப் படைக்கு, 126 அதி நவீன போர் விமானங்களை, ராபல் நிறுவனம், அடுத்த பத்தாண்டுகளில் வழங்கும். இந்த ஒப்பந்தம், 50 ஆயிரம் கோடி மதிப்பிலானது. முதல் கட்டமாக, 18 விமானங்களை, ராபல் நிறுவனமே தயாரித்து வழங்கும் என்றும், மீதமுள்ள விமானங்களை, இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வழங்கும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய ராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|