பதிவு செய்த நாள்
01 பிப்2012
13:29

நஷ்டத்தை ஈடு செய்வதற்காக, மொபைல் போன் கோபுரங்களை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.நஷ்டத்தை ஈடு கட்ட:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நாடு முழுவதும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன் கோபுரங்களையும், தமிழக அளவில், 8,754 கோபுரங்களையும் நிறுவி உள்ளது.இவற்றின் அமைப்பு மற்றும் பராமரிப்பிற்காக, வருவாயில், 30 சதவீதம் வரை, இந்நிர்வாகம் செலவிடுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டும், நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும், நடப்பு நிதியாண்டிற்குள், மொபைல் போன் கோபுரங்களை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்தம்: இதற்காக, டாடா டெலி சர்வீசஸ், வீடியோகான் டெலி கம்யூனிகேஷன்ஸ், எடிசாலட் டி.பி., டெலிகாம் சர்வீசஸ், பார்தி ஏர்டெல், ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுடன், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.ஒரு மொபைல் போன் கோபுரம் அமைந்துள்ள இடம், அதைப் பகிர்ந்து கொள்ளும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து, மாதத்திற்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
"வருவாய் அதிகரிக்கும்': இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், தன் வருவாயில், 1,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்க, பி.எஸ்.எல்.என்., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், 2009-10ம் நிதியாண்டில், 1,823 கோடி ரூபாயும், கடந்த நிதியாண்டில், 6,000 கோடி ரூபாயும், நஷ்டத்தை சந்தித்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின், தாமதமான இம்முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம், மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "சிக்னல்' பிரச்னை எதுவும் ஏற்படாது. மாறாக, பி.எஸ்.என்.எல்., வருவாய் அதிகரிக்கும்'' என்றார்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|