பதிவு செய்த நாள்
04 பிப்2012
00:08

சென்னை: முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த, டி.ஐ., சைக்கிள்ஸ் ஆப் இந்தியா நிறுவனம், சைக்கிள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் குரோம்பேட்டையில் புதிய ÷ஷாரூமை திறந்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் டி.ரகுராம் கூறியதாவது:வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் புதிய சைக்கிள்களில் உள்ள வசதிகள் மற்றும் மாடல்களை நேரில் கண்டறிந்து, வாங்கும் வகையில், இப்புதிய ÷ஷாரூம், 900 சதுர அடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான சைக்கிள்கள் பல்வேறு மாடல்களில் கிடைக்கின்றன. இவ்வகை சைக்கிள்களின் விலை,குறைந்த பட்சம் 3,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரையில் மாடல்களுக்கேற்ப நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில், 800க்கும் அதிகமான ÷ஷாரூம்கள் உள்ளன. மெட்ரோ நகரங்களில் 200 ÷ஷாரூம்களும், இதர நகரங்களில் 600க்கும் மேற்பட்ட ÷ஷாரூம்களும் உள்ளன. இதை வரும், 2013ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1,100 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 50 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. சிறப்பு வகை சைக்கிளுக்கான சந்தையில், நிறுவனத்தின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. நிறுவனம், ஹெர்குலிஸ் மற்றும் பீ.எஸ்.ஏ. பிராண்டுகளில் சைக்கிள்களை கொண்டுள்ளன. இவ்வாறு ரகுராம் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|