பதிவு செய்த நாள்
04 பிப்2012
00:11

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த தானியங்கள் உற்பத்தி, 25.04 கோடி டன்னாக அதிகரிக்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.நாட்டின் பல மாநிலங்களில், நடப்பாண்டில், இதுவரை நல்ல மழைப் பொழிவும், சாதகமான பருவ நிலையும் நிலவுகிறது. இதனால், நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மொத்த தானியங்கள் உற்பத்தியில், நெல் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு, 10.28 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி, 8.83 கோடி டன்னாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 23.21 கோடி டன்னாக இருந்தது. ஆக, நடப்பு நிதியாண்டில், தானியங்கள் உற்பத்தி, முந்தைய நிதியாண்டை விட, 1.84 கோடி டன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருப்பு வகைகள் உற்பத்தி, 1.73 கோடி டன்னாகவும், பருத்தி உற்பத்தி, 3.41 கோடி பொதிகள் (1 பொதி- 170 கிலோ) என்ற அளவிலும் வளர்ச்சிகாணும். மேலும், இதர வகை தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியும் முறையே, 1.73 கோடி டன் மற்றும் 3.05 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவைதவிர, கரும்பு உற்பத்தியும், கடந்த ஆண்டை விட, 50.90 லட்சம் டன் அதிகரித்து, 34.79 கோடி டன்னாக அதிகரிக்கும் என மத்திய அரசின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|