பதிவு செய்த நாள்
04 பிப்2012
00:13

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -உள்நாட்டை விட, சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் விலை உயர்ந்து வருவதால், அதன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதுவரை இயற்கை ரப்பரை ஓர் அளவிற்கு இறக்குமதி செய்து வந்த இந்தியா, தற்போது ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.முன்பேர வர்த்தக சந்தைகடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ இயற்கை ரப்பர் விலை, சர்வதேச சந்தையை விட கிலோவிற்கு 14 - 16 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. தற்போது இயற்கை ரப்பர் விலை குறைந்துள்ளது. கொச்சி சந்தையில் ஒரு கிலோ ஆர்.எஸ்.எஸ்-4 ரக இயற்கை ரப்பர், 190 ரூபாய்க்கு விலை போகிறது. தாய்லாந்து விளைபொருள் முன்பேர சந்தையில், ஒரு கிலோ ரப்பர் 202 ரூபாய் என்ற அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.இந்தியாவில், இயற்கை ரப்பர் விலை நீண்ட காலத்திற்கு இதே நிலையில் இருந்தால், பல்வேறு நாடுகள் அதிக அளவில் இந்தியாவில் இருந்து இயற்கை ரப்பரை இறக்குமதி செய்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயற்கை ரப்பர் விவசாயிகளை காக்கும் பொருட்டு, தாய்லாந்து அரசு எடுத்த நடவடிக்கையால், சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் விலை உயர்ந்துள்ளது.
இயற்கை ரப்பர் விலை வீழ்ச்சியை தடுப்பதற்காக, சென்ற ஜனவரியில், தாய்லாந்து அரசு, 2 லட்சம் டன் இயற்கை ரப்பரை கொள்முதல் செய்ய முடிவு செய்தது. இதற்காக 53 கோடி டாலர் செலவிடப்படும் என்றும் தெரிவித்தது.கூட்டுறவு சங்கங்கள்இதையடுத்து, சென்ற ஜனவரி 24ம் தேதி, ரப்பர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரப்பர் தோட்ட கூட்டமைப்பிற்கு வட்டியின்றி 1,500 கோடி பகத் (தாய்லாந்து கரன்சி) வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.இத்தொகையை கொண்டு 2 லட்சம் டன் இயற்கை ரப்பர் கொள்முதல் செய்யப்படும் என்பதால், தாய்லாந்தில் இயற்கை ரப்பர் விலை, கடந்த 12 வாரங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.தாய்லாந்து அரசு, அதன் நடவடிக்கைகள் மூலம், ஒரு கிலோ இயற்கை ரப்பர் விலையை 120 பகத் என்ற அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில், இயற்கை ரப்பர் விலை உயர்ந்துள்ளது என, கொச்சி ரப்பர் வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளதால், இயற்கை ரப்பர் பயன்பாடும் குறையும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயம், இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், அதன் விலை வீழ்ச்சியடைந்தது. ஆனால், அண்மைய மறுமதிப்பீட்டில், சீனாவின் ரப்பர் பயன்பாடு உயரும் என்று தெரிவிக்கப்பட்டதால், அதன் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.ரப்பர் உற்பத்திநடப்பாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தி, மிக குறைந்த அளவாக 0.3 சதவீத வளர்ச்சியை காணும் என, இயற்கை ரப்பர் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதி ஆண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், நாட்டின் ரப்பர் ஏற்றுமதி, சாதனை அளவாக 320 சதவீதம் உயர்ந்து 22 ஆயிரத்து 472 டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 7,293 டன்னாக இருந்தது.இதே காலத்தில், இயற்கை ரப்பர் இறக்குமதி 1 லட்சத்து 66 ஆயிரத்து 463 டன்னில் இருந்து, 1 லட்சத்து 33 ஆயிரத்து 693 டன்னாக குறைந்துள்ளது. இதே காலத்தில், உள்நாட்டில் ரப்பர் பயன்பாடு 7 லட்சத்து 8,705 டன்னில் இருந்து, 7 லட்சத்து 17 ஆயிரத்து 485 டன்னாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், ஒட்டுமொத்த ரப்பர் உற்பத்தி, 6 லட்சத்து 51 ஆயிரத்து 150 டன்னில் இருந்து, 6 லட்சத்து 79 ஆயிரத்து100 டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|